கோதுமை மற்றும் கோதுமை மாவு ஆகியவற்றின் விலை கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவுக்கு கடுமையாக அதிகரித்துள்ளது.

விலைவாசியைக் கட்டுப்படுத்த அரசுக் கிடங்குகளில் இருந்து 30 லட்சம் தொன் கோதுமையை வெளிச்சந்தையில் விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.

உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையில் அமைச்சரவைக் குழு ஆலோசித்த பின்னர் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இந்திய உணவுக் கழகத்தில் இருந்து கோதுமை இ-ஏலம் மூலமாக இன்னும் ஒருவாரத்தில் விற்பனை தொடங்கும்.

மொத்த வியாபாரிகளுக்கு விற்பனை செய்யப்பட்டு இரண்டு மாதங்களில் விற்பனை நிறைவு பெறும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.