மாதாந்தம் 45,000 ரூபாவுக்கு மேல் வருமானம் பெறுகின்றவர்களுக்கு வரியை அறவிடுமாறு சர்வதேச நாணய நிதியம் இலங்கை அரசாங்கத்துக்கு நிபந்தனை விதித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன இந்தத் தகவலை நேற்று நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை வெளியிடும் செய்தியாளர் சந்திப்பில் வைத்து தெரிவித்தார்.

சர்வதேச நாணயநிதியத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒப்பந்தம் இன்னும் வெளிப்படுத்தப்படவில்லை. என்றாலும், கடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் வைத்து ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வெளிப்படுத்தியதாக, அமைச்சர் பந்துல கூறியுள்ளார்.

ஆனால் அரசாங்கம் 100,000 ரூபாவுக்கும் அதிகமான மாத வருமானத்தைப் பெறுகின்றவர்களுக்கு மாத்திரமே வரி விதிப்பு செய்வது என்ற தீர்மானத்திலிருந்து மாறவில்லை என்று அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.