தற்போது நாட்டில் பெய்துவரும் மழையுடன் கூடிய காலநிலையால் நாட்டில் பலபாகங்களிலும் வெள்ள அபாயம் ஏற்பட்டு வருகின்றது.

அந்த வகையில் அம்பாறை மாவட்டத்தில் திருக்கோவில் பிரதேசத்தில்  பெய்துவரும் அடை மழையுடன் கூடிய காலநிலையால் விவசாய நிலங்கள் உள்ளிட்ட பல இடங்களிலும் வீடுகளிலும்  வெள்ள அனர்த்தம் ஏற்பட்டுள்ளது . அத்துடன் சுமார் 1500 குடும்பங்கள் தற்காலிகமாக உறவினர் வீடுகளில் தங்கியுள்ளனர்.

இதனை அறிந்த திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் அவர்கள் மற்றும் அவரது குழுவினர் களவிஜயம் ஒன்றை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட இடங்களை பார்வையிட்டார்.

மேலும் இதற்காண ஆரம்பக்கட்ட நடவடிக்கையாக திருக்கோவில் பிரதேசத்தில் உள்ள முகத்துவாரங்கள் மற்றும் நீர் ஓடைகளும் விவசாய அமைப்புக்கள், கிராம பொது அமைப்புக்கள் மற்றும் மீனவர்கள், இராணுவத்தின் 242வது படையணியின் உதவியுடன் மண் அகழ்வு இயந்திரம் மூலம் அகழ்ந்து விடப்பட்டதுடன் மேலதிக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஜே.கே.யதுர்ஷன் தம்பிலுவில்