நாடாளுமன்ற அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் கூடியுள்ளது.

இந்நிலையில் நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 24ஆம் திகதி வரை முன்னெடுக்க நாடாளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான குழு தீர்மானித்துள்ளது. 

இந்த விடயத்தை நாடாளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தசநாயக்க தெரிவித்துள்ளார்.

அதற்கமைய, முற்பகல் 9.30 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை இலங்கைத் தேயிலைச் சபை சட்டத்தின் கீழ் 2245/29, 2248/36, 2248/37 மற்றும் 2258/14 ஆம் இலக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் வெளியிடப்பட்ட நான்கு ஒழுங்குவிதிகள் மற்றும் கப்பனிச் சட்டத்தின் கீழ் 2303/07 ஆம் இலக்க வர்த்தமானியில் வெளியிடப்பட்ட கட்டளை என்பன விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு அனுமதிக்கப்படவுள்ளதாக செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.