அரச வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ள முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தனவை பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, சரண குணவர்தனவை 30,000 ரூபாய் ரொக்கப் பிணையிலும், தலா 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையிலும் விடுதலை செய்ய உத்தரவிட்டது.

இது தொடர்பான வழக்கு விசாரணையை மார்ச் 23ஆம் திகதி எடுத்துக் கொள்ளவும் கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை உத்தரவிட்டது.

தேசிய லொத்தர் சபையின் தலைவராக கடமையாற்றும் போது, தேசிய லொத்தர் சபைக்குச் சொந்தமான மூன்று வாதங்களை அவர் முறைகேடாக பயன்படுத்தியுள்ளார்.