பாறுக் ஷிஹான்

பொலிஸார் முன்னிலைப்படுத்திய போது 5 நாட்கள் (120 மணித்தியாலங்கள்) தடுப்பு காவல் உத்தரவு பெறப்பட்டதுடன் ஏனைய இச்சம்பவத்துடன் தொடர்பு பட்டு தலைமறைவாகியுள்ள சந்தேக நபர்கள் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளையும் கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தின் பின்னணி அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று இராணுவ புலனாய்வு துறையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றினை அடுத்து திருக்கோவில் விசேட அதிரடிப்படையினர் இந்நடவடிக்கையினை மேற்கொண்டு இரு வாகனங்கள் ஒரு சந்தேக நபர் 50 கிராம் 139 மில்லி கிராம் ஹெரோயினுடன் 36 வயது சந்தேக நபரையும் கடந்த வருடம் டிசம்பர் வியாழக்கிழமை(22) நள்ளிரவு கைது செய்து கல்முனை தலைமையக பொலிஸாரிடம் நீதிமன்ற நடவடிக்கைக்காக ஒப்படைத்துள்ளனர்.இவ்வாறு கல்முனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட வாகனங்களில் ஒரு வேன் மற்றும் கார் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை இந்த நடவடிக்கையின் போது தப்பி சென்ற சந்தேக நபர்கள் மற்றும் வாகன உரிமையாளர்கள் என இனங்காணப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள பகுதிகள் விசேட அதிரடிப்படை மற்றும் பொலிஸாரினால் கல்முனை பகுதியில் சோதனை இடப்பட்டுள்ளன.

இதன் போது தப்பி சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்படுவார்கள் என கல்முனை தலைமையக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும் கல்முனை கடற்கரை பள்ளிவாசல் வீதியில் கடந்த டிசம்பர் மாதம் (23) காலை கார் ஒன்றிலிருந்து ‘ஐஸ்’ போதைப்பொருள் விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.