நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா 2023.

-பெரியநீலாவணை எஸ். அதுர்சன்-

நற்பிட்டிமுனை வளர்மதி பாலர் பாட சாலையின் வருடாந்த விளையாட்டு விழா நட்பட்டிமுனை பொது மைதானத்தில் வளர்மதி பாடசாலை அபிவிருத்தி சங்கத் தலைவர் .கே. மகேந்திரன் தலைமையில் நேற்றைய தினம்(29 – 10 – 2023) நடைபெற்றது.

விழாவில் பிரதம அதிதியாக கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் ,சஞ்சீவி சிவகுமார். பிரதிப் பதிவாளர் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஒலுவில்,, அஸ்-ஷேக் ஐ. எல் .எம் அனீஸ்(J.P) முன்பள்ளி கல்வி பணிப்பாளர் அம்பாறை அலுவலகம். .கே. கனகராஜா தலைவர் அம்பலத்தடி விநாயகர் ஆலயம்,. ஆசிரியர் இலங்கைநாதன்
மற்றும் சிறப்பு அதிதிகளாக எ.எம். ஆய்ஷா.ஆரம்பகால குழந்தைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் கல் முனை வடக்கு. எ. கே ஹனா. ஆரம்பகால குழந்தை பருவ அவிருத்தி உத்தியோகத்தர் கல்முனை வடக்கு. ஆகியோர் கலந்து நிகழ்வை சிறப்பித்தனர்.
50 மீட்டர் ஓட்டம், முயல் ஓட்டம், சாக்கோட்டம்,போத்தலில் நீர் நிரப்புதல், எழுத்துக்கள் சேகரித்தல், ஜோடி சேகரித்தல், மற்றும் பாலர்களின் உடற்பயிற்சி நிகழ்வுகள், போன்ற பல விளையாட்டுக்களும் நடைபெற்றன.

யூ.மகேந்திராதேவி,ஐ.றிஸ்மியா,கே.வேவா ஆகிய ஆசிரியைகள் பாலர்களுக்கான பயிற்சிகளை வழங்கியிருந்தனர்.