பாண்டிருப்பு மகா வித்தியாலயத்துக்கு 1994 பிரிவு மாணவர்களால் ஒலி பெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு!

பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தின் 1994 ஆம் வருட பழைய மாணவர்களினால் ஒலிபெருக்கி சாதனங்கள் அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக இப் பாடசாலைக்கு இந்த மாணவர்களினால் பாடசாலையின் அபிவிருத்திக்கும் மாணவர்களின் கல்வி விருத்திக்கும் பல்வேறு உதவிகளை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

இன்று (01.11.2023 – புதன் ) பாடசாலையின் நீண்ட நாள் தேவைகளில் ஒன்றான ஒலி பெருக்கி தொகுதியை கையளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. மிகப் பெறுமதியான இவ் ஒலிபெருக்கி தொகுதியை அன்பளிப்பு செய்த பாடசாலையின் பழைய மாணவர்கள் ஆகிய Batch94 குழுவினருக்கு எமது பாடசாலை சமூகம் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்வதோடு. இவ் ஒலிபெருக்கி தொகுதியை பொருத்துவதற்கு தேவையான உதவிகளை வழங்கிய .R.ராஜன் (சுதர்சன் வெல்டிங் வேக்சொப், பெரியநீலாவணை), .N.அசோக், .T.மோகனகீர்த்தி (AJ Construction, Pandiruppu -01) ஆகியோருக்கும், ஒலிவாங்கி(FM Mike) , மின் கம்பிச்சுருள் (Electrical coil) என்பவற்றை கொள்வனவு செய்ய நிதி அனுசரணை வழங்கிய இங்கிலாந்தில் வசிக்கும் பாண்டிருப்பைச் சேர்ந்த திருமதி.யோகாக்தி தனராஜ் அவர்களுக்கும், ருமேனியாவில் தொழில் புரியும் பாண்டிருப்பைச் சேர்ந்த .R.பாலசுப்ரமணியம் அவர்களுக்கும், மென்பொருள் உதவியை வழங்கிய எமது சகோதர பாடசாலையான கமு/கமு/உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் திரு.S.கலையரசன் அவர்களுக்கும் எமது பாடசாலை சமூகம் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம் என பாண்டிருப்பு மகா வித்தியாலய அதிபர் ஆசிரியர்கள் தெரிவித்தனர்.