நன்றி -முரசு

சாம்பிராணி தூபத்துக்கு பெற்றோல் ஊற்றியதால்
புறக்கோட்டை ஆடையகத்தில் தீ பரவல் ஏற்பட்டது

கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் தீ பரவியமைக்கான காரணத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆடையகத்திற்கு சாம்பிராணி தூபம் காட்டுவதற்காக தேங்காய் சிரட்டைகளுக்கு பெற்றோல் ஊற்றி அதனை பற்றவைக்கும் போதே தீ பரவியுள்ளது என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.

கொழும்பு -.புறக்கோட்டை 2 ஆம் குறுக்குத்தெருவிலுள்ள ஆடையகத்தில் நேற்று ஏற்பட்ட தீ விபத்தில் 23 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாகவுள்ளது.

அவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தகவல்கள் தெரிவிக்கின்றன.

You missed