சீனாவின் ஜனாதிபதியாக 3வது முறையாகவும் Xi Jinping இன்று பதவியேற்றார்.

3ஆயிரம் உறுப்பினர்களை கொண்ட சீனாவின் தேசிய மக்கள் சபையின் உறுப்பினர்களினால் ஏகமனதாக வாக்களிக்கப்பட்டு இவ்வாறு மீண்டும் ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

மேலும் சீனாவில் மாவோ சேதுங்கிற்கு பின்னர் மிகவும் சக்திவாய்ந்த தலைவராகவும் 69 வயதான Xi Jinping வரலாற்றில் பதிவாகியுள்ளார்.

அத்துடன் அவர் இன்னும் 2 நாட்களில் அமைச்சரவைக்கான புதிய உறுப்பினர்களை நியமிப்பார் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Xi Jinping எதிர்வரும் 5 ஆண்டுகள் சீனாவின் அதிபராக செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.