இந்தியாவில் இளைஞர் ஒருவர் முகநூல் நேரலையில் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அசாம் மாநிலத்தை சேர்ந்த ஜெய்தீப் ராய் (27) என்பவர் இளம்பெண்ணொருவரை சில ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்ய விரும்பினார்.

ஆனால் அப்பெண் திருமணத்திற்கு மறுத்ததால் மனம் உடைந்த ஜெய்தீப் முகநூல் நேரலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலைக்கு முன்னர் அவர் பேசுகையில், நான் முறைப்படி திருமணம் செய்து கொள்ளலாம் என அவளிடம் காதலை முன்மொழிந்தேன்.

ஆனால், அனைவரின் முன்னிலையிலும் அவள் மறுத்துவிட்டாள் என கூறியுள்ளார்.