கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ள சனத் ஜயசூரிய, பயிற்சியாளராகப் பணியாற்றும் இறுதிப் போட்டி இன்று (28) பாகிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெறவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதும் இந்தப் போட்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இன்று இரவு நடைபெறுகிறது.முன்கூட்டியே எடுக்கப்பட்ட தீர்மானம்
இந்த உலகக் கிண்ணத் தொடருடன் தான் பயிற்சியாளர் பதவியிலிருந்து விலகவுள்ளதாக சனத் ஜயசூரிய தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே அறிவித்திருந்தார். தனது இந்தத் தீர்மானத்தில் எவ்வித மாற்றமும் இல்லை என்பதை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த அவர்:”எனது ஒப்பந்தக் காலம் இன்னும் எஞ்சியிருந்த போதிலும், தலைமைப் பயிற்சியாளர் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் எனக்கு இல்லை. தனிப்பட்ட காரணங்களினால் இந்தப் பதவியிலிருந்து விலகத் தீர்மானித்துள்ளேன்,” எனத் தெரிவித்தார்.

