பாராளுமன்றத்தினுள் எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டம்.

''

விவசாயிகளுக்கு உரம் வழங்கக்கோரி பாராளுமன்றத்தில் இன்று எதிர்க்கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இன்று காலை நாடாளுமன்றம் ஆரம்பமான போது பதாகைகளை ஏந்தியவாறு எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

நள்ளிரவு முதல் LIOC எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

''

இன்று நள்ளிரவு (22) முதல் எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பதாக LIOC (இலங்கை இந்திய பெற்றோலிய நிறுவனம்) அறிவித்துள்ளது.அதற்கமைய புதிய விலைகள்,பெற்றோல் ஒக்டேன் 92 – ரூ. 5 இனால் – ரூ. 157 இலிருந்து ரூ. 162 ஒக்டேன் 95 – மாற்றமில்லை – ரூ. 184டீசல் ஒட்டோ டீசல் – ரூ. 5 இனால் – ரூ. 111 இலிருந்து ரூ. 116 சுப்பர் டீசல் – மாற்றமில்லை – ரூ. 144மண்ணெண்ணெய் – ரூ. 77இறுதியாக கடந்த ஜூன் 11ஆம் […]

CAA புலனாய்வு உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிக்க கோரிக்கை

''

(அஸ்லம் எஸ்.மௌலானா) மாவட்ட செயலகங்களில் இணைப்புச் செய்யப்பட்டிருக்கும் பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபையின் புலனாய்வு விசாரணை உத்தியோகத்தர்களை மீளவும் பிரதேச செயலகங்களுக்கு நியமிப்பதற்கு உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென தென்கிழக்கு சமூக அபிவிருத்தி மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது. இக்கோரிக்கையை வலியுறுத்தி வர்த்தக, வாணிப அமைச்சர், பாவனையாளர் அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் தலைவர் போன்றோருக்கு கடிதங்களை அனுப்பி வைத்திருப்பதாக மன்றத்தின் செயலாளரும் இலங்கை கல்வி […]

தமிழ்க் கைதிகளை அச்சுறுத்திய சம்பவத்தை விசாரிக்குமாறு உச்ச நீதிமன்று உத்தரவு

''

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த செப்டம்பர் 12ஆம் திகதி இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் சட்ட மாஅதிபரின் ஆலோசனையுடன் விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மாஅதிபருக்கு உச்ச நீதிமன்றம் இன்று (21) உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பில் 8 கைதிகளால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு, காமினி […]

கடற்படையினரின் படகு மோதி யாழ். கடலில் காணாமல்போன தமிழக மீனவர் சடலமாக மீட்பு

''

(ந.லோகதயாளன்) யாழ்., காரைநகர் – கோவிலம் கடற்பகுதியில் ஏற்பட்ட படகு விபத்தையடுத்து கடலில் மூழ்கி காணாமல்போயிருந்த தமிழக மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். யாழ்., காரைநகர் கடற்பகுதியிலிருந்து இன்று மாலை குறித்த மீனவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் தமிழகத்தின், கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த ராஜ்கிரன் என்ற மீனவர் எனத் தெரியவந்துள்ளது. காரைநகர்- கோவிலம் கடற்பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு இந்திய மீனவர்கள் சிலர் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபட்டனர். இதனை அப்பகுதியில் கண்காணிப்புப் […]

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிப்பு

''

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை மேலும் நீடிக்கப்பட்டிருக்கிறது.நாட்டின் சுகாதார நிலையை கருத்தில் கொண்டு எதிர்வரும் 31ஆம் திகதி வரை பயண தடையை நீடிப்பதற்கு ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்திருக்கிறார்.என்றாலும், அவசர பயணம் நிமித்தம் பயணிப்பவர்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

இலங்கையை வந்தடைந்த நெனோ நைட்ரஜன் திரவ உரம்!

''

நெனோ நைட்ரஜன் மூலத்துடன் கூடிய விஷேட திரவ உரத்தினை இறக்குமதி செய்ய அமைச்சரவை அண்மையில் அனுமதி வழங்கியிருந்தது. 9 இலட்சம் ஹெக்டேயருக்கு தேவையான திரவு உரத்திற்கே இவ்வாறு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நைட்ரஜன் மூலத்துடன் கூடிய 3.1 மில்லியன் லீட்டர் விஷேட திரவ உரத்தை இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் அதன் முதல் தொகுதியாக 1 இலட்சம் லீட்டர் விஷேட திரவ உரம் நேற்று (19) […]

எரிபொருள் விலைகளை அதிகரிக்க வேண்டுகோள்

''

எரிசக்தி அமைச்சின் கோரிக்கை நிதியமைச்சால் நிராகரிப்பு எரிபொருட்களின் விலைகளை அதிகரிக்கவேண்டு​மென எரிசக்தி அமைச்சு விடுத்த வேண்டுகோளை நிதியமைச்சு நிராகரித்துள்ளதாக இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் தெரிவித்துள்ளார். விலைகளை அதிகரிக்காவிட்டால் அதிகாரிகள் வேறு வகையான தீர்வொன்றை முன்வைப்பார்கள் என நம்புவதாக பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜயசிங்க தெரிவித்துள்ளார். இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்திற்கு ஏற்படும் நஷ்டத்தை அரசாங்கத்தின் தலையீட்டின் மூலம் ஈடுசெய்வதற்கான முயற்சிகளில் ஈடுபடப்போவதாக நிதியமைச்சு தெரிவித்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

விவசாய பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு கிட்டும்

''

விவசாய சங்க பிரதிநிதிகளுடன் இராணுவத் தளபதி சந்திப்பு கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள பல விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் குழு தங்களது விவசாயப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் நோக்கில் இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவை சந்தித்துள்ளனர்.  இந்த சந்திப்பின்போது தமது தேவைகளை ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருமாறு விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் இராணுவ தளபதியிடம் வேண்டுகோள் விடுத்தனர். அத்தோடு கவனிக்கப்படாத அரச நிலங்களை விவசாயத்திற்காக பயன்படுத்துவதற்கான சந்தர்ப்பத்தினை […]

பெருந்தொகை Pfizer தடுப்பூசிகள் இன்று இலங்கை வந்தடைந்தன

''

இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட 608,000 Pfizer தடுப்பூசி டோஸ்கள் இன்று (19) அதிகாலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. பாடசாலை மாணவர்களுக்கு தடுப்பூசி வழங்கியதைத் தொடர்ந்து, 3ஆவது டோஸ் தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு அமைய, அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தினால் 50 இலட்சம் Pfizer தடுப்பூசி டோஸ்களை கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்வனவுக்காக கோரப்பட்டுள்ள Pfizer தடுப்பூசி டோஸ்களில் இம்மாதம் ஆரம்பத்தில் ஒரு தொகை வந்தடைந்திருந்ததோடு, நேற்றையதினம் […]