குஜராத்தில் இருந்து  லண்டன் புறப்பட்ட AI 171 விமானம்  விபத்து :242 பேர் பயணம் செய்ததாக அதிர்ச்சி தகவல்

இந்தியாவின் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் விமான நிலையம் அருகே விமானம் ஒன்று 242 பயணிகளுடன் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது.
அகமதாபாத் – மேகனி நகரில் விமானம் விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. விமான விபத்தை தொடர்ந்து விமான நிலையம் அருகே கரும்புகை வெளியேறி வரும் நிலையில் விமானத்தில் இருந்தவர்கள் நிலை குறித்து அச்சம் ஏற்பட்டுள்ளது.
விபத்துக்குள்ளான விமானம் எயார் இந்தியா நிறுவனத்தை சேர்ந்தது என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.