Category: இலங்கை

கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

ரெஜினோல்ட் குரே காலமானார்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது…

தமிழரசு வெளியேறினாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பு பலமடைந்துள்ளது : கூட்டில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு செல்வம் அழைப்பு

தமிழரசுக் கட்சி வெளியேறினாலும், தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து வெளியேறியவர்கள் மீள இணைந்துள்ளமையால் இந்த கூட்டு பலமடைந்துள்ளது. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களும் இந்த கூட்டில் இணைய வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன்…

முடிவை எடுத்துவிட்டு ஏன் நாடகமாடுகின்றீர்கள்..! சுமந்திரனை நோக்கிச் செல்வம் ஆவேசம்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூன்று கட்சிகளும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் – தனித்து – பிரிந்து கேட்பது என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழுவில் முடிவெடுத்துவிட்டு இப்போது வந்து ஏன் நாடகமாடுகின்றீர்கள் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனை நோக்கி ரெலோவின்…

பொருட்களின் விலைகளை குறைத்தது சதொச

லங்கா சதொச நிறுவனம் நேற்றுமுதல் அமுலாகும் வகையில் நான்கு பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது. இதற்கமைய, சம்பா அரிசி கிலோ 5 ரூபாவினாலும், உள்ளூர் வெள்ளை பச்சையரிசி 16 ரூபாவினாலும், வெள்ளை நாடு 2 ரூபாவினாலும், கோதுமை கிலோ 5 ரூபாவினாலும் குறைக்கப்பட்டதாக…

மூன்று புதிய தூதுவர்களின் நியமனங்களுக்கு உயர் பதவிகளுக்கான குழு அனுமதி

மூன்று புதிய தூதுவர்களை நியமிக்க உயர் பதவிகளுக்கான நாடாளுமன்றக் குழு அனுமதி வழங்கியுள்ளது. இதன்படி, லெபனான் குடியரசின் இலங்கைக்கான புதிய தூதுவராக கபில சுசந்த ஜயவீரவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பஹ்ரைன் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக விஜேரத்ன மெண்டிஸை நியமிப்பதற்கும் உயர்…

புலமைப்பரிசில் பெறுபேறு தொடர்பில் வெளியான அறிவிப்பு

தரம் 05 மாணவர்களுக்கான புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளை இம்மாத இறுதிக்குள் வெளியிட பரீட்சை திணைக்களம் தீர்மானித்துள்ளது. பரீட்சை விடைத்தாள்களை மதிப்பிடும் பணி தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த டிசெம்பர் 18 ஆம் திகதி பரீட்சை நடைபெற்றதுடன், 334,698 மாணவர்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உயிரிழந்த கனேடியர் தொடர்பில் வெளியான தகவல்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் வருகை முனையத்தில் விழுந்து உயிரிழந்தவர் தொடர்பான மேலதிக தகவல்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர். இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட கனேடிய பிரஜை ஒருவரே கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விழுந்து உயிரிழந்துள்ளதாக விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…

விமான நிலையத்தில் உயிரிழந்த பயணி – விசாரணைகள் ஆரம்பம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இன்று (செவ்வாய்கிழமை) காலை கட்டாரில் இருந்து வந்த குறித்த நபர் வருகை முனையத்தில் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கனடாவில் வசிக்கும்…

முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை கூடுகிறது

(எம்.எம்.அஸ்லம்) உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழு நாளை செவ்வாய்க்கிழமை (10) கூடவுள்ளதாக அறிவிக்கப்படுகிறது. மருதமுனை பொது நூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தலைமையில் நாளை பிற்பகல்…