கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த பயணி ஒருவர் திடீரென உயிரிழந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இன்று (செவ்வாய்கிழமை) காலை கட்டாரில் இருந்து வந்த குறித்த நபர் வருகை முனையத்தில் தரையில் விழுந்து உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கனடாவில் வசிக்கும் 55 வயதான குறித்த நபர் கொழும்பிலுள்ள தனது உறவினர்களை சந்திப்பதற்காக இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.