Category: இலங்கை

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா நியமனம்!

மட்டக்களப்பு மாவட்ட புதிய அரசாங்க அதிபராக கலாமதி பத்மராஜா இன்று (செவ்வாய்க்கிழமை) பிற்பகல் பிரதமர் அலுவலகத்தில் வைத்து தமக்கான நியமன கடிதத்தினை பெற்றுக் கொண்டுள்ளார். இதனைத் தொடர்ந்து நாளை (புதன்கிழமை) திகதி மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுகவுள்ளார்.…

சிறுநீரக கடத்தல்; கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கைது

பொரளை பகுதியிலுள்ள தனியார் வைத்தியசாலையில் இடம்பெற்ற சிறுநீரக கடத்தல் சம்பவத்தில் இரண்டு கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மூவர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த கடத்தலுக்கு ஆதரவளித்த முக்கிய முகவர் ஒருவரும், போலி ஆவணங்களை தயாரித்து அதற்கு ஆதரவாக செயல்பட்ட…

இருநாள் இலவச ஊடக செயலமர்வு

நூருல் ஹுதா உமர் சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இருநாள் இலவச ஊடக செயலமர்வு இம்மாதம் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது. ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 17 – 35 வயதிற்குட்பட்ட தமிழ், முஸ்லிம்…

கடந்த 24 மணியாலங்களில் இடம்பெற்ற விபத்துகளில் இரண்டு குழந்தைகள் உட்பட 8 பேர் உயிரிழப்பு!

முச்சக்கரவண்டியில் பயணித்த மற்றுமொரு குழந்தை காயமடைந்து நுவரெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் 16 வயதுடைய முச்சக்கரவண்டி சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நாவலப்பிட்டி பகுதியில் பேருந்திலிருந்து தவறி விழுந்து 16 வயதுடைய பாடசாலை மாணவன் உயிரிழந்துள்ளதுடன், சம்பவம் தொடர்பில் பேருந்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக…

இன்று முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்து

இன்று (16) முதல் 30 குறுந்தூர ரயில் சேவைகள் இரத்துச் செய்யப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. நிலவும் ஊழியர் பற்றாக்குறை காரணமாக ரயில் சேவைகளை இரத்துச் செய்ய வேண்டியேற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் காமினி செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கத்தினால் தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கி வைப்பு

அம்பாறை மாவட்டத்தின் பழவெளி மற்றும் பழைய வளத்தாப்பிட்டி கிராமங்களில் உள்ள பெண்கள் தலைமை தாங்கும் வசதி குறைந்த விதவைகள் குடும்பங்களுக்கு தைப்பொங்கலுக்கான அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் நிகழ்வு பழவெளி சிவன் ஆலயத்தில் வெ. மோகன் தலைமையில் நடைபெற்றது. இதில் கோரக்கர் நண்பர்கள்…

தமிழ் கட்சிகளுக்கு நான் பொம்மையல்ல!ஜனநாயக போராளிகளை நம்ப முடியாது:விக்னேஸ்வரன் அதிரடி

தமிழ்க் கட்சிகள் சில என்னை பொம்மை போல பாவித்து தாங்கள் நினைத்ததை செய்வதற்கு முயற்சித்தார்கள் போல தெரிந்தது. அது எனக்கு மன வேதனையை ஏற்படுத்தியது அதனால் கட்சிகளின் கூட்டத்தில் இருந்து நான் வெளியேறினேன் என தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகம்…

கோதுமை மாவின் மொத்த விலை குறைப்பு

கோதுமை மாவின் மொத்த விலை குறைக்கப்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், 220 ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ கோதுமை மா 200 முதல் 195 ரூபா வரை விற்பனை செய்யப்படவுள்ளதாக மேலும் தெரிவித்துள்ளனர்.

ரெஜினோல்ட் குரே காலமானார்

வடக்கு மாகாண முன்னாள் ஆளுநர் ரெஜினோல்ட் குரே காலமானார். வாத்துவையில் உள்ள விடுதி ஒன்றில் நேற்று (12) இரவு இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் ஏற்பட்ட திடீர் சுகயீனமடைந்ததையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் காலமானார். பாணந்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு அவரது…