நூருல் ஹுதா உமர்

சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் இருநாள் இலவச ஊடக செயலமர்வு இம்மாதம் 21 ஆம், 22 ஆம் திகதிகளில் சாய்ந்தமருதில் இடம்பெறவுள்ளது.

ஊடகத்துறையில் ஆர்வமுள்ள அம்பாறை மாவட்டத்தை சேர்ந்த 17 – 35 வயதிற்குட்பட்ட தமிழ், முஸ்லிம் இளைஞர், யுவதிகள் இச்செயலமர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

இந்த செயலமர்வில் செய்தி எழுதும் திறன்கள், தொலைபேசி ஊடகவியல் (Majo Journalism) ஆகியவை கற்பிக்கப்படவுள்ளதுடன் இதனைத் தொடர்ந்து முற்றிலும் இலவசமாக 6 மாத கால ஊடக கற்கை நெறியும் ஆரம்பிக்கப்படவுள்ளது.

எனவே, ஆர்வமுள்ளவர்கள் தங்களது முழுப்பெயர், விலாசம், பிறந்த திகதி, வயது, தேசிய அடையாள அட்டை இல, வாட்ஸ்ஆப் இல, கையடக்க பேசி இல, என்பவற்றை 077 350 850 9 என்ற வாட்ஸ்ஆப் இலக்கத்திற்கு அனுப்பு வைக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117