( வி.ரி. சகாதேவராஜா)

பொலநறுவ மாவட்டத்தில் ஒரு சிங்கள கிராமத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

பொலனறுவையில் அமைந்துள்ள நாமல் போக்குல  பெரும்பான்மையாக சிங்கள மக்கள் வசிக்கும் ஒரு கிராமமாகும் . இருந்தாலும், அங்கு சில தமிழர் குடும்பங்களும் அமைதியாகக் கூடி வாழ்ந்து வருகின்றனர். 

அந்த கிராமத்தில் காளியம்மன் ஆலயம் ஒன்றுள்ளது. இது அப்பகுதியினரால் பக்தி பூர்வமாக வழிபட்டுத் தொன்மையுடன் பராமரிக்கப்படும் ஒரு முக்கியமான தலம். 

இவ்வாலயத்தில் நேற்று ஒரு பிரத்யேக நிகழ்வாக ஓர் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இந்த புனித சிவலிங்கத்தினை ஆஸ்திரேலியாவில் வாழும் சிவதிரு இளங்கோ வழங்கி உதவியுள்ளார் . அதனால் இக்கைங்காரியம் நடைபெற்றது

ரசிங்க சித்தரின் அன்பும் ஆசியும் நிரம்பிய சூழலில், சிவாச்சாரியார் அவர்களின் புனித கைம்மூலமாக பிரதிஷ்டை நிகழ்வு நடை பெற்றது குறிப்பிடத்தக்கது.

தம்பிலுவில் திருநாவுக்கரசு நாயனார் குருகுலப் பணிப்பாளர் கண. இராசரெத்தினத்தின் வழிகாட்டலில் செயலாளர் பா.சந்திரேஸ்வரன் அந்த நிகழ்வை நெறிப்படுத்தியிருந்தார்.