கல்முனை மாநகர சபை உத்தியோகத்தர்களின் பிள்ளைகளுக்கு பாராட்டு

(ஏ.எஸ்.மெளலானா)

கல்முனை மாநகர சபையின் நிதிப் பிரிவில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களான ஏ.எம்.எம். றியாஜத் மற்றும் எம்.எஸ்.நஜீம் ஆகியோரின் பிள்ளைகள் இம்முறை தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்தமைக்காக அவர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு இன்று திங்கட்கிழமை (04) மாலை நடைபெற்றது.

கல்முனை மாநகர சபை நிதிப் பிரிவின் ஏற்பாட்டில் கணக்காளர் கே.எம்.றியாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் உதவி ஆணையாளர் ஏ.எஸ்.எம். அஸீம், பொறியியலாளர் ஏ.ஜே.எச். ஜௌஸி ஆகியோரும் அதிதிகளாக பங்கேற்றிருந்தனர்.

இதன்போது முஹம்மட் றியாஜத் அறைஸ் அம்ஹர் மற்றும் நஜீம் முஹம்மட் நுபையில் நகீ ஆகியோர் நினைவுச் சின்னம், பரிசுப் பொதி மற்றும் பணப் பரிசு என்பன வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.

இதில் மாநகர சபையின் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன், நிர்வாகப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் என். பரமேஸ்வர வர்மண், நிதிப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் ஏ.ஏ.பாஸித், நிதி உதவியாளர் திருமதி எஸ். யோகராஜா, சுகாதாரப் பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் யூ.எம். இஸ்ஹாக் உட்பட நிதிப் பிரிவு உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

எதிர்காலத்தில் கல்வித்துறை சாதனைகளுக்காக மாநகர சபையின் அனைத்துப் பிரிவுகளையும் சேர்ந்த உத்தியோகத்தர்களின் பிள்ளைகளை பொதுவான விழாவொன்றில் பாராட்டி கெளரவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி இதன்போது தெரிவித்தார்.

You missed