ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலர் குரு பூஜை தினத்தை முன்னிட்டு இன்று (2023.12.04 – திங்கள்) பாண்டிருப்பு மகா வித்தியாலயத்தில் பாடசாலை இந்து மாமன்றத்தின் ஏற்பாட்டில் நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக கல்முனை கல்வி வலய இந்துசமய சேவைக்கால ஆசிரிய ஆலோசகர் .மா.லக்குணம் கலந்து சிறப்பித்ததோடு, தேசிய கல்வி நிறுவகத்தினால் வெளியீடு செய்யப்பட்ட “ஆயதனம்” எனும் நவராத்திரி சிறப்பிதழ் பாடசாலை அதிபர் T. வில்வராஜா மற்றும் இந்து மாமன்ற செயலாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டன.