பெரிய நீலாவணை மயானத்தில் அமரர் நவரெட்ணம் நினைவாக அஞ்சலி மண்டப ம்!

அமரர்.திரு.செல்வரெட்ணம் நவரெட்ணம் அவர்களின் 25 வது சிரார்த்த தினத்தை முன்னி்ட்டு அவரது ஞாபகார்த்தமாக பெரிய நீலாவணை இந்து மயான பூமியில் அமையப்பெறும் பிரார்த்தனை மண்டபத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெற்றது.

குறித்த நிகழ்வு நெக்ஸ்ட் ஸ்டெப் இளைஞர் கழகத்தின் மூத்த ஆலோசகர் திரு. கே.வரதராஜன் (ஓய்வுநிலை உதவிக்கல்விப் பணிப்பாளர்) அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இதில் மட்டக்களப்பு மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு,கி.சிவநாயகம் , அம்பாறை மாவட்ட கலாச்சார உத்தியோகத்தர் திரு.கு.ஜெயராஜி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

அத்துடன் ஸ்ரீ மஹாவிஷ்ணு பேச்சியம்மன் ஆலயங்களின் பரிபாலனசபையினர், ஸ்ரீ பெரியதம்பிரான் ஆலய பரிபாலனசபையினர் , ஆலையடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலய பரிபாலன சபையினர் மற்றும் காவேரி விளையாட்டுக் கழகம், வெஸ்ரன் விளையாட்டுக் கழகம், கோல்டன் விளையாட்டுக் கழகம், நியூஸ்ரார் விளையாட்டுக் கழகம், நண்பன் நண்பன் சமூக முன்னேற்ற கழகம் ஆகியவற்றோடு ஏனைய பொது அமைப்பு சார் உறவுகளும் கலந்து கொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தனர்.

குறித்த நிகழ்விற்கான சகல ஏற்பாடுகளையும் நெக்ஸ்ட் ஸ்டெப் கழக உறுப்பினர்களோடு இணைந்து கழகத்தின் முகாமையாளர் திரு. ந.செளவியதாஷன் அவர்கள் செய்திருந்தார்.

அமையப் பெறும் அமரர்.திரு. செல்வரெட்ணம் நவரெட்ணம் ஞாபகார்த்த பிரார்த்தணை மண்டபத்திற்கான அடிக்கல்லை அவரது துணைவியார் திருமதி. நவரெட்ணம் விஜயலெட்சுமி (ஓய்வுநிலை நிருவாக உத்தியோகத்தர் ) அவர்கள் நட்டு வைத்தார். குறித்த மண்டபத்திற்கான நிதியை அவரது புல்வர் திரு.ந.ருக்மாங்கதன் (இலங்கை மின்சார சபை மின்மாணி வாசிப்பாளர் ) அவர்கள் வழங்கியிருந்தார். சுமார் ரூபா‌ய் 950,000/= செலவில் குறித்த மண்டபம் அமையப்பெறவிருக்கிறது.மண்டபத்திற்கான வரை படத்தை திரு.பா.மதன்ராஜ் ( தொழில்நுட்ப பொறியியலாளர்) அவர்கள் வடிவமைத்து வழங்கியிருந்தார்.

அன்னாரின் குடும்பத்தார்க்கும்,நிகழ்வில் கலந்து கொண்ட அனைவருக்கும் கிராம மக்கள் சார்பாக நிறை நன்றிகளை நெக்ஸ்ட் ஸ்ரப் இளைஞர் கழகம் தெரிவித்தனர்.