உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிறப்பாக இடம் பெற்ற நிகழ்வு!

இன்று (05.06.2023) உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையிலும் நிகழ்வவானது வைத்திய சாலையின் பணிப்பாளர் டாக்டர் இரா. முரளீஸ்வரன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் போது மத்திய சுற்றாடல் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட உதவி பணிப்பாளர் எஸ் உதயராஜ் அவர்களும் பிராந்திய சுற்றாடல் அதிகாரி திருமதி செவ்வேள் குமரன் அவர்களும் வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் ஜெ. மதன் அவர்களும் கல்முனை சென்றல் பைனான்ஸ் முகாமையாளர் ஜெ. அனோஜ் அவர்களுடன் வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களும் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்வின் போது கடந்த மாதம் பிறந்த நாளை கொண்டாடிய வைத்தியசாலையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்களை மரநடுகையை ஊக்குவிக்கும் முகமாக பழ மரங்கள் வழங்கி அவர்களினால் நடப்பட்டன. இந்நிகழ்வுக்கான 50 பழ மரக்கன்றுகளை சுற்றாடல் முன்னோடி ஜனாதிபதி பதக்க கல்முனை தமிழ் கோட்ட மாணவர்களினாலும் பழ மரக்கன்றுகள் கல்முனை சென்றல் பைனான்ஸ் நிறுவனத்தினராலும் அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வின் போது வைத்தியசாலை ஊழியர்களின் குழந்தைகளினால் சுற்றாடல் பாதுகாப்பு, மரங்களை பாதுகாப்போம் பாதுகாப்பான இயற்கை உணவுகள் மற்றும் இயற்கை கிருமி நாசினிகள் என்னும் தொனிப்பொருளில் சுற்றாடல் காட்சிப்படுத்தல் நிகழ்வுகளும் இடம்பெற்றன.