கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R.முரளீஸ்வரன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கவும் Dr.Mrs. புஷ்பலதா லோகநாதன் அவர்களின் விடாமுயற்சியின் பலனாகவும் ஜூட் மசாடோ (Jude Machado) அவர்களின் மூலமாக “De Soutter Medical Ltd, Halton Brook Business Park, England ” மருத்துவ உபகரண உற்பத்தி செய்யும் நிறுவனத்திடமிருந்து 2023.02.28 ஆம் திகதியன்று 12.5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மருத்துவ உபகரணங்கள் வைத்தியசாலையின் பணிப்பாளர் Dr.R. முரளீஸ்வரன் அவர்களிடம் நன்கொடையாக வழங்கிவைக்கப்பட்டன.

இந் நிகழ்வில் Dr.Mrs.புஷ்பலதா லோகநாதன், கலாநிதி.நாகலிங்கம் பிரசாந்தன், எலும்பியல் சத்திர சிகிச்சை நிபுணர் Dr.S.வருண்பிரசாந், நிருவாக உத்தியோத்தர் Mr.T.தேவஅருள், வைத்திய அதிகாரிகள், தாதிய உத்தியோகத்தர்கள், வைத்தியசாலை சுகாதார ஊழியர்கள் மற்றும் வைத்தியசாலைக்கு வருகை தந்த நோயாளிகளும் கலந்துகொண்டனர்.