நியூ சன் ஸ்டார் இளைஞர் கழகம், கோரக்கர் நண்பர்கள் நலன்புரிச் சங்கம் மற்றும் கோரக்கர் பட்டதாரிகள் சமூக சேவை ஒன்றியம் இணைந்து மாபெரும் கௌரவிப்பு விழா இன்று கோரக்கர் தமிழ் மகா வித்தியாலயத்தின் பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.

இதன் போது பிரதம அதிதியாக பிரித்தானிய சைவ முன்னேற்றச் சங்கத்தின் கட்டடத் திட்டச் செயலாளரும் ஜெய் கட்டிட நிர்மாண ஆலோசனை நிறுவனத்தின் பணிப்பாளருமான ஜெயகுமார் அவர்களும் விசேட அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் மாஹிர் அவர்களும் சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஹனிபா அவர்களும் சம்மாந்துறை பொலிஸ் பொறுப்பதிகாரி ஜயலத் அவர்களும் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி முபாறக் அலி அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இதன்போது இளைஞர் சேவையில் சிறந்து விளங்கிய 4 இளைஞர்களுக்கு இலட்சிய இளைஞர் விருதுகளும் 45 இளைஞர்களுக்கு கௌரவ அங்கத்துவ நற்சான்றிழும் வழங்கப்பட்டன.