கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் இல்ல விளையாட்டு விழா; சன் பிளவர் இல்லம் சம்பியனாக தெரிவானது

(ஏ.எல்.எம்.ஷினாஸ்)

கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையின் ஆரம்பப் பிரிவு மாணவர்களின் இல்ல விளையாட்டு விழாவின் இறுதி நாள் நிகழ்வுகள் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் (14) மாலை நடைபெற்றது.

பாடசாலையின் அதிபர் அருட்சகோதரர் எஸ். ஈ. ரெஜினோல்ட் எப்.எஸ்.சி அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அம்பாறை மாவட்ட செயலாளர் சார்பில் உதவி மாவட்ட செயலாளர் சாமர ஜெயதிலக்க பிரதம அதிதியாக கலந்து கொண்டார். கல்முனை ஆதார வைத்தியசாலையின் வைத்திய பணிப்பாளர் டொக்டர் குணசிங்கம் சுகுணன், கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் ஆகியோர் கௌரவ அதிதிகளாக கலந்து கொண்டனர்.

சன் பிளவர் ஹவுஸ் (SUN FLOWER HOSE), லோட்டஸ்  ஹவுஸ்  (LOTUS HOSE)   , ஷூ  பிளவர் ஹவுஸ்(SHOE FLOWER HOUSE)   , அந்தூரியம் ஹவுஸ் (ANTHURIUM HOSE), ரோஸ் ஹவுஸ் (ROSE HOUSE) , டெய்ஸி ஹவுஸ் (DAISY HOUSE) ஆகிய ஆறு இல்லங்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு போட்டிகள் நடைபெற்றன. இறுதி நாள் நிகழ்வில் ஆயிரம் மாணவர்கள் கலந்து கொண்ட உடற்பயிற்சி, றில் கண்காட்சி  போன்ற நிகழ்ச்சிகள் வருகை தந்திருந்த பலருக்கும் விருந்தாக அமைந்தது. இறுதியில் 315 புள்ளிகளைப் பெற்று சன் பிளவர் இல்லம் சாம்பியன் இல்லமாக தெரிவு செய்யப்பட்டது. 307 புள்ளிகளை பெற்றுக் கொண்ட லோட்டஸ் இல்லம் இரண்டாம் இடத்தையும், 302 புள்ளிகளைப் பெற்று  ஷூ  பிளவர் எல்லாம் மூன்றாம் இடத்தையும் பெற்றுக் கொண்டது.

வெற்றி பெற்ற இல்லங்களுக்கு அதிதிகளினால் சாம்பியன் வெற்றி கிண்ணங்கள் வழங்கி வைக்கப்பட்டதோடு ஒவ்வொரு பிரிவு ரீதியாக முதல் மூன்று இடங்களை  பெற்றவர்களுக்கும் வெற்றி கிண்ணங்கள் வழங்ககப்பட்டன. இல்லங்களை அழகுபடுத்தும் போட்டிகளில் வெற்றி பெற்ற இல்லங்களுக்கும் இங்கு சிறப்பு பரிசில்கள் அதிதிகளினால் வழங்கி வைக்கப்பட்டன.

கல்முனை கல்வி வலயத்தின் தமிழ் கோட்ட பாடசாலைகளுக்கான பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.சுரேஷ், விளையாட்டு துறைக்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் எம்.எல்.எம்.முதர்ரிஸ், ஆரம்பக் கல்விக்கு பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். ஜஹாங்கிர் ஆகியோர் கலந்து கொண்டதுடன் விசேட அழைப்பில், பாடசாலையின் 125 வது ஆண்டு நிர்வாக குழுவின் பொருளாளர் எஸ். நிர்மலக்குமார், உதவி தவிசாளர் நிதர்சன் டேவிட்,  உறுப்பினர்களான பி.சகாயசான்ந், வினோஜ்ரதன், எஸ் சிந்துஜன், பாடசாலையின் அபிவிருத்தி நிறைவேற்று குழு செயலாளர் எஸ். ஸ்ரீரங்கன் உட்பட பாடசாலை நலன் விரும்பிகள், பழைய மாணவர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பாடசாலை சமூகம் சார்பில் பலரும் இந்த விளையாட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்டனர்.