” தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு.
செல்லையா பேரின்பராசா
கல்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவிலுள்ள சேனைக்குடியிருப்பு 01 ஏ கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள துரைவந்தியமேடு கிராமத்தில் அரசாங்கத்தினால் கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின்கீழ்
அறிமுகஞ் செய்யப்படும் ” தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம் ” எனும் அங்குரார்ப்பண நிகழ்வு நேற்று காலை பத்து (10.00) மணியளவில் துரைவந்தியமேட்டில் வெகு சிறப்பாக இடம்பெற்றது.
கிராம சேவை உத்தியோகத்தர். க. சுந்தராஜன் தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில் கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரீ.ஜே. அதிசயராஜ் , தேசிய மக்ககள் சக்தியின் கல்முனை வடக்கு பிரதேச இணைப்பாளரும் பொறியியயலாளருமான வீ.ரீ.சம்பந்தன், கல்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி.டாக்டர் நடராசா ரமேஸ், டாக்டர்.திருமதி.எஸ்.பிறேமியா தலைமையக சமுர்த்தி முகாமையாளர் வீ.ஸ்ரீநாத் , நிர்வாக உத்தியோகத்தர் (G.N ) ஏ.அமலதாஸன், பொலிஸ் பரிசோதகர்களான கே.எல்.எம்.முஸ்தபா , எச்.எம். சூரியகுமார, சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்செ.குமுதராஜ் , சமூக செயற்பாட்டாளர் தா.பிரதீபன் ஆசிரியர் ச. இந்திரன் ஆகியோர் பிரதம, கௌரவ , சிறப்பு அதிதிகளாக கலந்து சிறப்பித்ததனர்.











