துபாய் சர்வதேச விமான நிலையம் அனைத்து  விமானப் பயணங்களையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. 

அனைத்து பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இவ்வாறு விமானப் பயணங்கள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. 

விமான நிலையத்திற்கு அருகில் நடந்த ட்ரோன் தாக்குதலை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் தாக்குதல் காரணமாக,  கடுமையான தீப்பரவல் ஏற்பட்டிருந்த நிலையில்,  உயிரிழப்புக்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட தீப்பரவல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

விமானப் பயணங்கள் இரத்துச் செய்யப்பட்டுள்ள நிலையில், பயணிகள்  பயணிக்கவிருந்த விமானங்கள் மற்றும் பயண விபரங்கள் குறித்து அறிந்கொள்வதற்கு தொடர்புடைய விமான நிறுவனங்களைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

https://www.instagram.com/reel/DV7g6w0ierD