(எஸ்.அஷ்ரப்கான்)

அம்பாறை மாவட்டம், கல்முனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்முனை அமானா வங்கி தனியார் பேரூந்து நிலையத்தில் இன்று (11) இடம்பெற்ற விபத்தின் போது தனியார் பேரூந்தினால் பழக்கடை மற்றும் அதற்கு முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் ஆகியன சேதமாகியுள்ளது.

இவ்விபத்து இன்று (11) காலை 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

இவ்விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.