விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களது செயற்பாடுகளில் முன்னேற்றங்களை ஏற்படுத்திய உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் மிகச் சிறப்பாக இடம்பெற்றது.

கனடாவில் இருந்து இயங்கும் சர்வம் அறக்கட்டளை அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வானது வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியகலாநிதி. இரா. முரளீஸ்வரன் மற்றும் சர்வம் அறக்கட்டளை அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர் சுரேஷ் சுப்ரமணியம் தலைமையில் சிறப்பாக இடம்பெற்றது.

இங்கு குழந்தை நல மருத்துவ நிபுணர்களான Dr.பிறேமினி மற்றும் Dr.ரோஸான் மற்றும் இயன்மருத்துவ பிரிவு உத்தியோகத்தர்கள், மொழி மற்றும் பேச்சு சிகிச்சை நோயியல் உத்தியோகத்தர் கௌரவிக்கப்பட்டதோடு விசேட தேவை உடைய குழந்தைகளின் கலை நிகழ்வுகளும் பெற்றோர்களின் சிறப்புரைகளும் இனிதே இடம்பெற்றது.

வைத்தியசாலை பணிப்பாளர் முரளீஸ்வரன் உரையாற்றுகையில் “இது போன்ற விசேட தேவை உடைய பிள்ளைகளுக்கு சிகிச்சை வழங்கி அவர்களது வாழ்வில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் அனைத்து பாகங்களிலும் உள்ள வைத்தியசாலைகளும் முன்வர வேண்டும்” என்று குறிப்பிட்டார்.