கார்மேல் பற்றிமா பாடசாலை மாணவர்களுக்கு கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியில் விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளவிருக்கும் மாணவர்களுக்கான மருத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வு நேற்று (15)இடம்பெற்றது.

இந் நிகழ்வு கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்திய கலாநிதி இரா. முரளீஸ்வரன் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது.

இதன் போது கல்முனை ஆதார வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் Dr.J.மதன் மருத்துவர்கள் தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

இதன் போது 250 மாணவர்களுக்கு மருத்துவ சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.