யாழ்ப்பாணம் வலி.வடக்கில் பாதுகாப்பு படையினரின் கட்டுப்பாட்டில் இருந்த 108 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்பட்டு, 197 குடும்பங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படவுள்ளது.

75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பணிப்புரையின் பேரில், குறித்த காணிகள் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல் வெளியிட்டுள்ளது.

நாளை வெள்ளிக்கிழமை (03) காணிகள் கையளிப்பு நிகழ்வு வலி வடக்கின் பலாலி பகுதியில் நடைபெறவுள்ளது.