ஜனவரி மாதம் 29ஆம் தேதி உலக தொழுநோய் தினத்தை முன்னிட்டு கல்முனை வடக்கு ஆதார வைத்திய சாலையினால் சென் பெனெட்டிக்ஸ் உளநல காப்பகத்தில் (பாண்டிருப்பு) உள்ள நோயாளர்களுக்கு “இன்றே செயற்பட்டு தொழு நோயை முடிவுறுத்துவோம்” என்னும் தொனிப்பொருளில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வு நிகழ்வு ஒன்று ஜனவரி மாதம் 31ஆம் தேதி அன்று இடம் பெற்றது.

வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் Dr J. மதன் தலைமையில் நடாத்தப்பட்ட இந் நிகழ்வில் தோல் வைத்தியர் Dr.J.H.மசாகித், பொது சுகாதார பரிசோதகர்கள் சுபந்தன் மற்றும் ரசூஸ், தாதிய உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர் உள்ளிட்ட குழுவினர் கலந்து கொண்டனர்.

அதில் தொழுநோய்கான பரிசோதனைகள் இடம்பெற்றதோடு தொற்றா நோய்களை கண்டறியும் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது.

ஒரு தொழு நோயாளி இனங்காணப்பட்டதோடு அவருக்கு சிகிச்சையும் அளிக்கப்பட்டது.