கல்முனை ஆதார வைத்தியசாலையுடன் இணைந்து பாண்டிருப்பு-01 கிராம அபிவிருத்தி சங்கம் சென்ரல் பினான்ஸ் நிறுவனத்தின் அனுசரனையுடன் நடத்திய அவசர இரத்த தான முகாம் பாண்டிருப்பு கிராம அபிவிருத்தி சங்க கட்டிடத்தில் நேற்று முந்தினம் நடைபெற்றது.

கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கே. சோழ வேந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வேதநாயகம் ஜெகதீசன் கலந்து சிறப்பித்தார்.

கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி வசந்தினி யோகேஸ்வரன் மற்றும் பெரிய நீலாவணை போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி துஷார உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

கல்முனை ஆதார வைத்தியசாலை இரத்த வங்கியின் வைத்திய அதிகாரி டாக்டர் கவிதா தாதிய பரிபாலகர் கே. சசிகரன் உள்ளிட்ட சுகாதாரத் துறையினர் முகாமை நடத்தினர்.

அங்கு சங்க உறுப்பினர்கள், மகளிர் அமைப்புகள், இளைஞர் அமைப்புகள் இரத்தம் வழங்கினர்.