கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் நேற்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட்டது.

பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி. ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி. ஜே. அதிசயராஜ் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே. ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா. முரளீஸ்வரன் , எழுத்தாளர் உமா வரதராஜன் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.

இக்குறும்படத்தினை கிஷா பிலிம் மேக்கர்ஸ் இயக்கியிருந்தனர்.

You missed