வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு, பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான தனது விமான சேவைகளை மீண்டும் தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது.
அதன்படி, 2026 அக்டோபர் 23ஆம் தேதி முதல் லண்டன் கெட்விக் விமான நிலையத்திலிருந்து இலங்கைக்கு வாரத்திற்கு மூன்று நேரடி விமானங்கள் இயக்கப்படவுள்ளன.
இவ்விமான சேவைகளுக்கான டிக்கெட் விற்பனை நேற்று (17) தொடங்கியுள்ள நிலையில், தற்போது இலங்கையிலிருந்து லண்டன் நோக்கி நேரடி சேவையை வழங்கும் ஒரே விமான நிறுவனமாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் மட்டும் செயல்பட்டு வருகிறது.

