கல்முனை வடக்கு பிரதேச செயலக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரிவால் “ஆழ்கடல்” குறும்படம் இன்று 28 ஆம் திகதி வெளியிட்டு வைக்கப்பட உள்ளது.

பாண்டிருப்பு கலாச்சார மத்திய நிலையத்தில் பி.ப 3 மணிக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் இடம் பெற உள்ள இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் பிரதம அதிதியாகவும், கௌரவ அதிதிகளாக கல்முனை ஆதார வைத்தியசாலை வைத்தியட்சகர் இரா.முரளீஸ்வரன், எழுத்தாளர் உமா வரதராஜன் உட்பட பலர் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.

இக்குறும்படத்தினை கிஷா பிலிம் மேக்கர்ஸ் இயக்குகின்றனர்.