மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் உள்நாட்டில் அதிகரித்து வரும் எரிபொருள் கேள்வி காரணமாக, இலங்கையில் நாளை (19) முதல் QR குறியீடு மற்றும் வாகன இலக்கத் தகட்டின் இறுதி இலக்க அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்படவுள்ளது.
தற்போதைய எரிபொருள் விநியோக சவால்களை முறையாக முகாமைத்துவம் செய்வதற்காக பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே.ராஜகருண இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் இரட்டை எண்களாக அல்லது பூச்சியமாக (0, 2, 4, 6, 8) முடிவடையும் வாகனங்களுக்கு இரட்டை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 18, 20, 22…) எரிபொருள் விநியோகிக்கப்படும்.
வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கம் ஒற்றை எண்களாக (1, 3, 5, 7, 9) முடிவடையும் வாகனங்களுக்கு ஒற்றை எண்களைக் கொண்ட திகதிகளில் (உதாரணமாக: மார்ச் 19, 21, 23…) எரிபொருள் விநியோகிக்கப்படும்.

