தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் நிலைப்பாடு என்ன என்பது, அவர்களுக்கே, தெரியாத ஒரு நிலையிலேயே, தமிழ் மக்கள் மத்தியில் அரசியல் செய்து வருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம் சுமத்தியுள்ளார்.
நேற்றையதினம் இடம்பெற்ற நிகழ்வென்றின் பின்னர் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு இரா.சாணக்கியன் இவ்வாறு பதில் வழங்கியிருந்தார். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாட்டை அறிய நாம் ஆவலாக உள்ளோம்.எம்மை அரசியலில் இருந்து அகற்றி விட்டு,அவர்கள் மக்கள் நல்லது செய்ய நினைக்கிறார்கள் போல.

இலங்கை ஜனாதிபதியுடன் பேசாமல் அமெரிக்க ஜனாதிபதியுடன் பேசுவார்கள் நினைக்கின்றேன். 13 ஆம் திருத்தச் சட்டத்துடன் மாகாண சபையை இல்லாமல் ஒழிக்க இனவாதி சரத் வீரசேகர எவ்வாறு முயற்சிக்கின்றாரோ, அதைத் தான் கஜேந்திரகுமார் அணியும் .செய்கிறது என்றார்.