காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்—வான் மோட்டர்சைக்கிள் மீட்பு

(கனகராசா சரவணன்)

காத்தான்குடியில்  ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (10) இரவு கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஒன்று மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதுடன் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பெரும் குற்றத்தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி சப்இன்பெஸ்டர் ஏ.எம்.எஸ்.ஏ. றகீம் தலைமையிலான பொலிசர் மேற்கொண்டு வந்த விசாரணையில் ஒல்லிக்குளம் பாடசாலை ஒன்றில் ஆசிரியராக கடமையற்றிவரும் காத்தான்குடியைச் சேர்ந்த 51 வயதுடைய ஆசிரியருக்கும் காங்கேயனோடை பிரதேசத்தைச் சேர்ந்த கடத்தலில் ஈடுபட்டவர்களான இரு சகோதர்களுக்கும் இடையே காணி விவகாரம் தொடர்பாக நீதிமன்றில் வழக்கு இடம்பெற்றுவரும் நிலையில்.

ஆசிரியரை கடத்த திட்டமிட்டு மட்டக்களப்பில் நகரிலுள்ள வாகனம் வாடகைக்கு விடப்படும் கடை ஒன்றில் இருந்து வான் ஒன்றை வாடகைக்கு பெற்று அதனைக் கொண்டு  கடந்த 6ம் திகதி இரவு ஆசிரியர் வீட்டில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளியேறி மெத்தைப்பள்ளி வீதியில் பிரயாணித்துபோது எதிராக வான் வந்த இருவரும் அவரை வழிமறித்து வானில் இழுத்து ஏற்றி கடத்தி சென்றனர்.

இதன் பின்னர் கடத்தல்காரர்கள் தங்களது வீட்டிற்கு கொண்டு சென்று அவரை தாக்கிஅ ங்கு அடைத்துவைத்திருந்து இரு தினங்களின் பின்னர் 8 ம் திகதி ஆரையம்பதி பகுதியிலுள்ள மாவிலங்குதுறை பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளதையடுத்து அவரை பொலிசார் மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இந்த கடத்தலில் ஈடுபட்ட சகோதர்கள் இருவரில் ஒருவரை சம்பவதினமான நேற்று இரவு கைது செய்ததுடன் கைது செய்யப்பட்டவரின் சகோதரர் டுபாய்கு தப்பி ஓடியுள்ளதாகவும் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஒன்று மோட்டர்சைக்கிள் ஒன்றையும் மீட்டுள்ளதாகவும் கைது செய்யப்பட்டவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

You missed