அறநெறிக் கல்வியை அவசியமாக்க வேண்டியது நாம் அனைவரது கூட்டுப்பொறுப்பாகும்!

-தவராஜா சுலக்ஷனா –


ஒரு மனிதன் பூரணமான மனிதனாக இந்த உலகில் வாழ்வதற்கு அடிப்படை தகதி ஒழுக்கமுள்ளவராக வளர்வதே. ஒரு குழந்தைக்கு நற்பழக்கவழக்கங்களை சிறு வயது முதல் ஊட்டி வளாப்பது குடும்ப சூழலுடன் சமூக சூழலுமே இந்த சமூக சூழலில் முக்கியத்துவம் பெறுவது எமது வணக்கஸ்தலங்களும் கலை கலாசார விழிமியங்களை நற்பண்புகளை எம்முள் ஊட்டுவது எமது ஆன்மீக ஒழுக்க நெறிமுறைகளுமே.
இநு;து நெறி முறையில் எமது பிள்ளைகளை வளர்தெடுக்க பாடசாலை கல்வி போன்று அறநெறிக்கல்விக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

பிரதி ஞாயிறு தோறும் நடைபெறும் அறநெறிப்பாடசாலைகளுக்கு மாணவர்களை கட்டாயம் அதன் முக்கியத்துவதத்தை விளங்கப்படுத்தி அனுப்ப வேண்டியது ஒவ்வொரு பெற்றோரினதும் கடமையாகும். பாடசாலையிலும் அறநெறிப்பாடசாலைக்கு மாணவர்கள் செல்வதனை கட்டாயப்படுத்தி ஊக்குவிக்க வேண்டும்.

பாடசாலைக்கு மேலதிகமாக மாலைவேளகைளிலும் சனி ஞாயிறு விடுமுறை தினங்களிலும் பிதேத்தியேகமாக தனியார் வகுப்புக்கள் நடைபெறுவதானது மாணவர்களுக்கு அதிக சுமைகளை கொடுப்பதுடன் ,இவ்வாறான அறநெறி வகுப்புக்களுக்கும் மாணவர்கள் செல்வதை தடுப்பதாகவே அமைகிறது. எனவே அறநெறி பாடசாலை நடைபெறும் ஞாயிறு தினத்தில் தனியார் வகுப்புக்கள் முழுமையாக நடைபெறுவதை சமூகப்பபொறுப்புடன் நிறுத்தி மாணவர்கள் அறநெறிக்கல்வியை கற்கவும் அன்றைய நாள் ஓய்வாக விளையாட உறவினர்கள் வீட்டுக்குச்செல்ல என ஒரு சுதந்திரத்தையும் வழங்க வேண்டும். அது மாணவர்களுக்கு உடல் உள ரீதியாக ஆரோக்கியத்தை கொடுக்கும் என்தில் ஜயம் இல்லை.

அறநெறி வகுப்புக்களை தடுக்கும் விதமாக நடக்கும் சில தனியார் வகுப்புகள் ஏன்? எதற்காக? செயற்படுகின்றது.


வாரத்தில் ஒரு நாள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் அறநெறி வகுப்பு காலை ஒன்பது மணிக்கு ஆரம்பித்து குறிப்பிடட் சில மணி நேரமே நடைபெறும். இந்த நேரத்தில் சில ஆசிரியர்கள் தமது வருமானத்தை ஈட்டுவதற்காக வகுப்புகளை நடத்துவதும், சில பெற்றோர்கள் பிள்ளை கல்வி கற்றால் மட்டும் போதும் என நினைப்பது அவர்களின் எதிர்காலத்தில் பல பாதகங்களை ஏற்படுத்தும். இது பாரிய மாற்றம் நம் சமூகத்தில் ஏற்படவும் ஒரு காரணமாக அமைகிறது.

எமது சமய சமூக நற்பண்புகளுக்கு உயிர்ப்பினை கொடுங்கள் ஞாயிறு தினங்களில் தனியார் வகுப்புகளை தவிர்ப்பதற்காக இந்து சமய அமைப்புகள் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கூட்டுப்பொறுப்புடன் அறநெறிக்கல்விக்கு முக்கியத்துவம் கொடுப்போம்.

ஆசிரியர்களே குழந்தைகள் நமது எதிர்காலத்தில் வித்துக்கள் பரந்த உலகில் நீச்சல் அடிக்க கல்வி மட்டும் அல்ல அனுபவம் நல்ல விழுமியங்கள், பண்புகள்தேவை என்பதனைப் புரிந்து கொள்ளுங்கள்