இலங்கை மின்சார சபை கலைப்பு: 6 புதிய நிறுவனங்கள் உதயம்
கொழும்பு:09 மார்ச் 2026
இலங்கையின் மின்சக்தித் துறையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில், 56 ஆண்டுகள் பழமையான ‘இலங்கை மின்சார சபை’ (CEB) இன்று (09) நள்ளிரவுடன் அதிகாரப்பூர்வமாகக் கலைக்கப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக 6 புதிய அரச நிறுவனங்கள் இன்று முதல் தமது செயற்பாடுகளை ஆரம்பிக்கின்றன.
மின்சார சபையை மறுசீரமைக்கும் நடவடிக்கையின் கீழ், 1969-ஆம் ஆண்டின் 17-ஆம் இலக்க இலங்கை மின்சார சபைச் சட்டம் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது.
மின் உற்பத்தி, மின் கடத்துகை (Transmission), விநியோகம் மற்றும் கட்டமைப்பு இயக்கம் ஆகிய பணிகள் பிரிக்கப்பட்டு பின்வரும் 6 நிறுவனங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன:
தன்னார்வ ஓய்வுபெறும் திட்டத்தை (VRS) தேர்வு செய்தவர்களைத் தவிர ஏனைய ஊழியர்கள் அனைவரும் இந்த 6 நிறுவனங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கான புதிய நியமனக் கடிதங்கள் நாளை (10) முதல் வழங்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மின்சக்தித் துறையில் வெளிப்படைத்தன்மை மற்றும் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கில் எரிசக்தி அமைச்சர் குமார ஜெயக்கொடியினால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய இந்த மறுசீரமைப்பு நடைமுறைக்கு வந்துள்ளது.
