உகந்தை புத்தர் சிலை விவகாரம் ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு இடையூறாகலாம்!
திருக்கோவில் வருங்கால தவிசாளர் சசிகுமார் அறிக்கை
( வி.ரி.சகாதேவராஜா)
வரலாற்று பிரசித்தி பெற்ற உகந்தமலை ஸ்ரீ முருகன் ஆலயச் சூழலில் நிருமாணிக்கப்பட்ட புத்தர் சிலை விவகாரம்
ஜனாதிபதியின் இன நல்லிணக்கத்திற்கு ஒரு முட்டுகட்டை போடுவதற்கு சமனானது.
இவ்வாறு திருக்கோவில் பிரதேச சபையின் சுயேட்சை அணித்தலைவரும், தெரிவு செய்யப்பட்ட வருங்கால தவிசாளருமான பிரபல தொழிலதிபர் சுந்தரலிங்கம் சசிகுமார் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்..
இவ்விடயம் சம்மந்தமாக மக்களின் பிரதிநிதி என்றவகையில் ஜனாதிபதி அவர்களின் கவனத்துக்கு கொண்டுசெல்ல முடிவுசெய்துள்ளேன்.
கதிர்காமம் போல் உகந்தையையும் மாற்ற இடமளிக்க முடியாது.
முருகப்பெருமான் சிலையை நிறுவுவதில் தடங்கல் ஏற்படுத்திய வன ஜீவராசிகள் திணைக்களம் எங்கே போனது?
எனவே நீதியான தீர்வு கிடைக்க வேண்டும். அதனை ஜனாதிபதி உறுதிப்படுத்த வேண்டும். இது விடயமாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வருவேன் என்றார்.

