ஆற்றோரம் அநாதரவாக குழந்தை ஒன்று கண்டெடுப்பு

பாறுக் ஷிஹான்

ஒலுவில்   பிரதேசத்தில் பிறந்து சில நாட்களான   பெண் குழந்தை  ஒன்று உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.
 
மீன்பிடிக்க சென்ற ஒருவரால் கொடுக்கப்பட்ட தகலுக்கமைய குழந்தை மீட்கப்பட்டு  ஒலுவில் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தற்பொழுது குழந்தை அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இன்று(28) அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட  ஒலுவில் பிரதேசத்தில் இவ்வாறு குழந்தை மீட்கப்பட்ட  குழந்தை ஆரோக்கியமான நிலையில்  அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பொலிஸாரின் ஊடாக நீதிமன்றில் பாரப்படுத்த உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.