நாடறிந்த எழுத்தாளர் கலாபூசணம் கவிஞர் மூ.மகாதேவன் எழுதிய வேரை மறந்த விழுதுகள் சிறுகதை நூல் வெளியீட்டு நிகழ்வு நேற்று மட்/ககு/கறுவாக்கேணி விக்னேஷ்வரா கனிஸ்ர பாடசாலை மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
நூலாசிரியர் பல்வேறு சந்தர்ப்பங்களில் சமூகம் சார்ந்த பல்வேறு பிரதிபலிப்புகளை வெளிக்கொணரும் நோக்கில் அவரால் எழுதப்பட்டு பத்திரிகைகளில் வெளிவந்த சிறுகதை தொகுப்புகளை கொண்டு இந்நூல் வெளியீட்டு வைக்கப்பட்டது.
விழாவிற்கு த.நிர்மலன் கோரளளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்அவர்கள் தலைமை தாங்க ,பிரதம அதிதியாக.திருமதி.யெஜானந்தி திருச்செல்வம்.பிரதேச செயலாளர்.கோறளைப்பற்று அவர்களும், சிறப்பு அதிதியாக சி.சிவநேசராஜா அதிபர்கறுவாக்கேணி விக்னேஸ்வரா கனிஸ்ர பாடசாலை அதிபர் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் வாசகர்கள் ,பொதுமக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டு நூலாசிரியருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, எதிர்காலத்தில் இன்னும் பல நூல்களை எமது சமூகத்திற்காக உருவாக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர்.



