களுவாஞ்சிகுடி பகுதியில் விபத்துச் சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியில், பழுதடைந்த டிப்பர் வாகனத்தை உழவு இயந்திரம் ஒன்றின் உதவியுடன் கட்டி இழுத்துச் சென்றபோது, எதிர்பாராத விதமாக டிப்பர் வாகனம் உழவு இயந்திரத்தின் மேல் ஏறியதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனால் அங்கு பரபரப்பு நிலை ஏற்பட்டது. சம்பவத்தின் போது உழவு இயந்திர சாரதி கீழே குதித்து உயிர்தப்பியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



