‘சுழியம்’ குறும் திரைப்படம் – நாளை வெளியீடு

''

ஸ்ரூடியோ  96  (Studio 96 ) தயாரிப்பில் Black feathers creations வழங்கும் ‘சுழியம் ‘ ( SUZHIYAM ) குறுந்திரைப்படம் நாளை   திங்கட்கிழமை ( 29.11.2021 )  மாலை 7 மணியளவில் YouTube ல் வெளியிடவுள்ளதாக திரைப்படக்குழுவினர்கள் தெரிவித்துள்ளனர். இத்திரைப்படத்தின் முன்னோட்டம், கடந்த மாதம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.    இக் குறுந்திரைப்படத்தினை நகைச்சுவையுடன் கூடிய திரில்லர் கதையமைப்பில் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளை […]

கல்முனையில் சிலிண்டர் வெடிப்பு சம்பவம்

''

நிதான் கல்முனையில் சற்று முன்னர் சமையல் எரிவாயு ஒன்று வெடிப்பு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சம்பவம் கல்முனை வட்ட விதானை வீதியில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக நாட்டின் பரவலாக இந்த சம்பவங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

கல்முனையில் மேலும் இருவருக்கு தடை உத்தரவு!

''

கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு! மரணித்த த. ஈ.விடுதலைப்புலி உறுப்பினர்களை நினைவு கூறுவதற்கு நீதி மன்றத்தால் கல்முனையில் மேலும் இருவருக்கும் தடை உத்தரவு விதிக்கப்பட்டுள்ளது.கல்முனை பிராந்திய தமிழ் இளைஞர் சேனை தலைவர் ந. சங்கீத்துக்கு அக்கரைப்பற்று நீதி மன்றத்தாலும் தமிழரசுக் கட்சியின் வாலிபர் முன்ணனி துணை செயலாளர் அ. நிதான்சனுக்கும் இன்றைய தினம் கல்முனை நீதிமன்றால் தடை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.ஏற்கனவே முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் […]

பாண்டிருப்பில் நாவலர் சிலை திறந்து வைக்கப்பட்டது!

''

செல்லையா பேரின்பராஜா சைவத்திற்கும் தமிழுக்கும் அளப்பெரிய தொண்டாற்றிய ஸ்ரீலஸ்ரீ ஆறுமுக நாவலரின் உருவச்சிலை  பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தின் நுழைவாயிலில் இன்று 26.11.2021 திறந்து வைக்கப்பட்டது. கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பின் அனுசரனையில் இச்சிலை வடிவமைக்கப்பட்டது. இப்பாடசாலை அதிபர் கணேசலிங்கம் தியாகராஜா தலைமையில் இடம்பெற்ற இந் நிகழ்வில்கல்முனை வலயக்கல்விப்பணிப்பாளர் எஸ்.புவனேந்திரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு நாவலர் சிலையினை திரை நீக்கம் செய்துவைத்தார். இந் நிகழ்வில் கல்முனை தமிழ் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எஸ்.சரவணமுத்து தொழிலதிபரும் […]

பெரியநீலாவணை விஷ்ணு வீதிக்கான வீதி புனரமைப்பு ஆரம்பம்!

''

-கபிலன் – அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ‘கிராமிய வீதிகளை காபட் வீதிகளாக அபிவிருத்தி செய்யும்’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் பெரியநீலாவணை விஷ்ணு கோவில் வீதி 72.7 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது. வேலைத்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (25.11.2021) நடைபெற்றது. கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கல்முனை சுபத்திராம விகாராதிபதி ரன்முத்துகல தேரர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு […]

கல்முனையில் நூல் வெளியீட்டு நிகழ்வு

''

செல்லையா பேரின்பராசா கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ‘கிழக்கின் நூறு சிறு கதைகள்’ தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு 28-11-2021 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணிக்கு கல்முனை உவெஸ்லி உயர்தர தேசிய பாடசாலையின் நல்லதம்பி மண்டபத்தில் இடம்பெறவுள்ளது.கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் மாகாணப் பணிப்பாளர் சரவணமுத்து நவநீதன் தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் தென்கிழக்குப் பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியல் அபூபக்கர் றமீஸ் பிரதம விருந்தினராகவும், கல்முனை பிரதேச செயலாளர் ஜெ. […]

கல்முனை மாமாங்க வித்தியாலய வீதியின் அவலநிலை

''

கல்முனை ஸ்ரீ மாமாங்க வித்தியாலயம் அமைந்துள்ள வீதி பள்ளம் படுகுழியாகக் காணப்படுகிறது.தற்போது மழை காலம் என்பதால் நீர் நிறைந்து சேறும் சகதியுமாக உள்ளது. இதனால் கல்முனை மாமாங்க வித்தியாலயம், கல்முனை சிங்கள மகா வித்தியாலயம், உவெஸ்லி உயர்தர பாடசாலை ஆகியவற்றிற்கு இவ்வீதியால் செல்லும் மாணவர்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே குறித்த வீதியை உடனடியாக செப்பனிடுவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கையெடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்படுகின்றது.

கல்முனையில் ஐவருக்கு தடை உத்தரவு

''

கல்முனையில் ஐவருக்கு தடை உத்தரவு! போரில் மரணித்தவர்களுக்கு நினைவு கூறுவதற்கு கல்முனை நீதிமன்ற நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் கல்முனை இருதயநாதர் ஆலய பங்கு தந்தை தேவதாசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி அப்பாறை இணைப்பாளர் துஷானந் உட்பட 5 பேருக்கு கடந்த 22ம் திகதியில் இருந்து […]

கல்முனை இளைஞனின் ஆதங்கம்!

''

வடகிழக்கு அபிவிருத்தி நாயகர்களே !!! அமைச்சர், இராஜாங்க அமைச்சர், அபிவிருத்தி குழு தலைவர்கள் நீங்கள் இப்படிப்பட்ட ஒரு பதவியில் இருந்து கொண்டு ஏன் இன்றுவரை கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி கொடுக்க வில்லை… கட்சி பேதங்களை தாண்டி .. கல்முனை தமிழ் மக்களின் கனவுகளில் ஒன்றான வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்த ஒற்றுமையாக செயல்படுங்கள்…. சரி நடந்ததை விடுவோம் கல்முனை தமிழர்களின் பூர்வீகம்.. முஸ்லீம் கட்சிகள் வரவு செலவு […]

கல்முனைப் பகுதியில் திடீர் சோதனை : 100 வாகன ஓட்டிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

''

பாறுக் ஷிஹான்அம்பாறை  பிராந்தியத்தில் காலை முதல் மதியம் வரை   போக்குவரத்து பொலிஸாரின்   திடீர் சோதனை நடவடிக்கை  ஆரம்பமாகியுள்ளது. இன்று(19)   காலை முதல் மதியம்   வரை  இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது  கல்முனை நகரப்பகுதி, நற்பிட்டிமுனை பிரதான சந்தி ,தாளவட்டுவான் சந்தி,  பாண்டிருப்பு, சவளக்கடை போன்ற இடங்களில்  மேற்கொள்ளப்பட்டன. இத் திடீர் சோதனையில்    சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது,  தலைக்கவசம் அணியாது செல்வது,   […]