கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 – இடம் நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானம் – அனைவரும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கப்படுகின்றனர்.
கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் ,கல்முனை வடக்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் ஆடி மாத பௌர்ணமி கலை விழா நாளை 10.07.2025 வியாழக்கிழமை நற்பிட்டிமுனை பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது.
கல்முனை வடக்கு பிரதேச செயலாளர் ரி.ஜே.அதிசயராஜ் தலைமையில் நடைபெறவுள்ள இந் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக மூ.கோபாலரெட்ணம் ( பேரவை செயலாளர் – கிழக்கு மாகாணசபை) ,சிறப்பு அதிதிகளாக எழுத்தாளர் உமா வரதராஜன் ,மாவட்ட கலாசார ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் ஏ.எல்.தௌபீக், சஞ்சீவி சிவகுமார் ( சிரேஷ்ட பதிவாளர் தென் கிழக்கு பல்கலைக்கழகம் – தலைவர் கல்முனை தமிழ் சங்கம்) ,மற்றும் விசேட அதிதிகளாக எஸ்.தனராஜ் ( அதிபர் சிவசக்தி வித்தியாலயம்), எம. ஜீவராஜ் ( நிருவாக உத்தியோகத்தர்), ஏ.அமலதாஸ் ( கிராம நிருவாக உத்தியோகத்தர்) ஆகியோரும் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
நிகழ்வுகள் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அன்புடன் அழைக்கப்படுகின்றனர்.
நிகழ்ச்சி தொகுப்பு கிலசன் மற்றும் கஜானா