Category: பிரதான செய்தி

தமது உரிமைகளுக்காக மட்டக்களப்பில் திரண்ட வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்கள்

கடந்த 4ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தினம், தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளிலும், தமிழர்களுக்கான தீர்வு விடயங்களை முன்னிறுத்தியும் யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பல சிவில் அமைப்புகள் இணைந்து வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய பேரணியொன்று ஆரம்பிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்…

சர்வதேச கண்காணிப்புடன் கூடிய பொதுவாக்கெடுப்பின் மூலம், தமிழ் மக்களின் ஆணை பெறப்படவேண்டும்; பேரணியின் இறுதியில் மட்டக்களப்பு பிரகடனத்தில் வலியுறுத்து

தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமை, அதன் இறைமை மற்றும் தமிழ் மக்களின் பாரம்பரிய மற்றும் வரலாற்றுத் தாயகம் அங்கீகரிக்கப்படுவதோடு, முதலில் தமிழர் தாயகத்திலிருந்து ஆக்கிரமிப்பு இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய எழுச்சிப் பேரணியில் இறுதியில் வெளியிடப்பட்ட…

மட்டக்களப்பிற்குள் நுழைந்தது வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் எழுச்சிப் பேரணி!

வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியானது யாழ். பல்கலைகக் கழக, கிழக்கு பல்கலைக் கழக மாணவர்களும் தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் சிவில் சமூகங்களின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டு வரும் உரிமைக்கான போராட்டம் இன்று காலை திருகோணமலை மாவட்டத்தின் வெருகலம்பதி சித்திரவேலாயுதர் சுவாமி…

13ம் திருத்தம் – நான்கு பிரதான பௌத்த பீடங்களுக்கு மாற்றமாக தென்பகுதி பௌத்த பிக்குகள் பரபரப்பு அறிவிப்பு

பதின்மூன்றாம் திருத்தத்திற்கு மேலதிகமாக தமிழர்களுக்கு அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என பௌத்த பிக்குகள் கூட்டாக அறிவித்தனர். தென்பகுதியில் உள்ள பௌத்த பிக்குகள் அடங்கிய சர்வமத குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் மேற்கொண்டு வடபகுதியில் உள்ள சர்வமதத் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடினர். கலந்துரையாடலுக்கு பின்னர்…

மட்டக்களப்பு பேரணியில் நாமும் கலந்து கொள்வோம்

வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி வரும் (#N2E) பேரணியானது வடக்கு கிழக்கு பல்கலைகழக மாணவர்களால் ஆரம்பிக்கப்பட்டு இந்த மாபெரும் போராட்டமானது செவ்வாய்கிழமை (07.02.2023) காலை 9 மணி அளவில் வெருகலை வந்தடைந்து அதன் பின்னர் கதிரவெளியில் மு.ப.10, மணிக்கு மட்டக்களப்பு மாவட்டத்தில் இருந்து…

துருக்கி, சிரியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம் – ஆயிரக்கணக்கானோர் பலி

துருக்கியில் சிரியாவின் எல்லையை ஒட்டிய பகுதியில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்களில் 2000-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 7 ஆயிரத்துக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். 7.8 ரிக்டர் அளவில் அதிகாலை நேரத்தில் முதல் நிலநடுக்கம் ஏற்பட்டது. அதன் பிறகு பிற்பகலில் 7.5 ரிக்டர் அளவில் மேலும்…

வடக்கில் இருந்து கிழக்கிற்கு எழுச்சிப் பேரணியை தடுப்பதற்கு அரச புலனாய்வு துறையினர் முயற்சி?

வடக்கில் இருந்து கிழக்கை நோக்கி இடம்பெறும் மாபெரும் சுதந்திர தின எதிர்ப்பு பேரணியை முறியடிப்பதற்கு பாரிய சதித்திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதாக கிழக்கு பல்கலைகழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வாழைச்சேனை புகையிரத நிலையத்திற்கு முன்பாக சில முஸ்லிம் அமைப்புக்களை வைத்து குறித்த சதித்திட்டத்தை முன்னெடுக்க…

இலங்கைக்கு செப்டெம்பர் வரையில் அவகாசம்! பங்களாதேஷின் அறிவிப்பு

பங்களாதேஷிடம் இருந்து கடனாகப் பெற்ற 200 மில்லியன் டொலர்களை எதிர்வரும் செப்டெம்பர் மாதத்திற்குள் இலங்கை திருப்பிச் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சர் ஏ.கே.அப்துல் மொமன் தெரிவித்துள்ளார். இலங்கை படிப்படியாக முன்னேறி வரும் நிலையில் கடனை திருப்பி செலுத்துவதற்கு…

வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் ஊர்வலம்!

அரசாங்கத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்கு முறைகள், ஆக்கிரமிப்புக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கில் இருந்து கிழக்கு வரையான பேரணிக்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் இன்று ஊர்வலமொன்றை இடம்பெற்றது. யாழ்ப்பாணம் பல்கலைகழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் பல்கலைகழக முன்றலிலிருந்து நேற்று ஆரம்பமாகிய…

இலங்கையானது பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி-பற்ரீஸியா ஸ்கொட்லன்ட்

நீங்கள் சிறப்பு வாய்ந்த பொதுநலவாயக் குடும்பத்தின் ஒரு பகுதி என்பதற்காகவே தாம் இலங்கைக்கு வந்துள்ளதாக பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் பற்ரீஸியா ஸ்கொட்லன்ட் தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர இவ்வாறு தெரிவித்துள்ளார். இதேவேளை இலங்கை தற்போது முகங்கொடுத்திருக்கும்…