சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவி தொடர்பில் மத்திய வங்கியின் ஆளுனர் நந்தலால் வீரசிங்க கருத்து வெளியிட்டுள்ளார்.

வங்குரோத்து அடைந்த நாட்டின் கடன் செலவுகளை குறைப்பதற்கு இந்த நிதி உதவி பயன்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த காலங்களில் சர்வதேச நாணய நிதியத்தினால் 16 தடவைகள் கடன் வழங்கப்பட்ட போதிலும் அவை கொடுகடன் தொகைகளை ஈடு செய்ய மட்டுமே போதுமானதாக காணப்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இம்முறை வழங்கப்படும் கடனுதவியானது அரசாங்கம் உள்நாட்டு சந்தைகளில் கடன் பெறுவதனை தவிர்க்கும் வகையில் கிடைக்கப் பெறுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

சர்வதேச ஊடகமான புளும்பர்க் இணைய தளத்திற்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளுக்கு அமைய கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.


Warning: Undefined variable $post in /home/kalmowix/public_html/wp-content/themes/newsup/inc/ansar/hooks/hook-index-main.php on line 117